Ad Code

Responsive Advertisement

ஒளியாண்டு என்றால் என்ன? எப்படி கணக்கிடுகிறார்கள்?

 



ஒளி ஒரு ஆண்டில் சென்றடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு. ஆகவே இது காலத்தின் அளவு கிடையாது, தூரத்தின் அளவாகும். ஒரு நொடியில் ஒளியானது சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் செல்லும். ஆம் மூன்று லட்சம்!!! அதாவது பூமியை சுற்றி ஏழு முறைக்கு மேல் வந்து விடும். 


இந்த அசுர வேகத்தில் ஒரு ஆண்டில் எத்தனை தூரம் செல்லும் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள். ரொம்ப சுலபம் தான் - மூன்று லட்சம் கிலோமீட்டர் x 60 நொடிகள் x 60 நிமிடங்கள் x 24 மணி x 365 நாள் என்பது சுமார் 9.46 ட்ரில்லியன் கிலோமீட்டர். (ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன், ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன், ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்). மனிதனால் ஏவப்பட்ட Voyager விண்கலம் தற்போது சுமார் 15-17 கிலோமீட்டர் ஒரு வினாடிக்கு என்ற வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஒளியின் வேகத்தோடு ஒப்பிட்டால் இது ஜுஜுபி !!!


இந்த கணக்கு படி, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சுமார் 8.4 ஒளி நிமிடங்கள் ஆகும். நமக்கு மிக அருகில் உள்ள நக்ஷத்திரம் Proxima Centauri 4.22 ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளது. சிரியஸ் நக்ஷத்திரம் சுமார் 8 ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளது.


ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிய முயற்சி செய்தவர் Galileo ஆவார். தன்னுடைய உதவியாளரை ஒரு சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு சிறு மலைக்கு மேல் சென்று ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு விளக்கை காண்பிக்க சொன்னார், அது எத்தனை வினாடிகளுக்கு பிறகு தனக்கு தெரிகிறது என்பதை வைத்து, distance ÷ time = speed என்று கணக்கிட்டு விடலாம் என்று நினைத்தார். ஆனால் ஒளியின் அசுர வேகத்தினால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இது நடந்தது பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில். 


பிறகு 1676 ஆம் வருடம் Ole Romer என்பவர் ஒரு முயற்சி செய்தார் - ஜூபிடர் இன் கோள்கள் ஜூபிடர் ஐ சுற்றி வரும் போது பூமியில் இருந்து பார்த்தால் ஒரு சில மணி நேரங்களுக்கு தெரியாது, பிறகு மறுபடியும் தெரியும். அப்பொழுதே ஜூபிடர் எத்தனை தூரத்தில் உள்ளது என்பதை கெப்ளர் என்பவர் கண்டு பிடித்து விட்டார். இதை வைத்து Romer, speed = distance ÷ time என்று ஓரளவிற்கு துல்லியமாக ஒளியின் வேகத்தை கண்டறிந்தார். பிறகு 1850 களில் ஃப்ரெஞ்ச் விஞானி Foucault என்பவர் இன்னும் துல்லியமாக ஒளியின் வேகத்தை கண்டறிந்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement