புதுச்சேரியில் சிலிண்டர் விலையை மேலும் குறைத்து முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 குறைகிறது. சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.500, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.350 குறைகிறது.
மாநில அரசின் சார்பில் சிவப்பு அட்டைக்கு ரூ.300, மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 மானியம் தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும் என ஒன்றிய அரசு நேற்று அறிவித்திருந்தது.
0 Comments