Ad Code

Responsive Advertisement

காலை உணவு திட்டம் - நாளிதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்..!!

 




முதல்வரின் காலை உணவு திட்டம் தொடர்பாக விமர்சித்த நாளிதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.


தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


நாடு முழுவதும் இந்த திட்டம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இன்று ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ள விமர்சினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது டிவீட்டர் பக்கத்தில் கூறியதாவது, சூத்திரர்கள் கல்வி வளர்ச்சியின் மீதுள்ள பார்ப்பனக் காட்டமே நாளிதழின் தலைப்புச் செய்தி கி.வீரமணி. “உண்மையின் உரைகல்” எங்கே போய் உரைத்துப் பார்த்திருக்கிறது பாருங்கள்.


காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது முதலே பார்ப்பனர்கள் பலரின் புலம்பல்களை நாளும் கேட்க முடிகிறது. காலம் காலமாக படிக்கக் கூடாது என்று தடுத்து வைக்கப்பட்டிருந்த பள்ளிக் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு அரசு அனைத்து வகையான வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது என்பதை பொறுக்க முடியவில்லை அவர்களால். 


பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் என்ற பாகுபாட்டை இந்த அரசு காட்டவில்லையே; அனைவருக்கும் அல்லவா உணவளிக்கிறது. இவ்வாறு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement