Ad Code

Responsive Advertisement

அதிக பென்ஷன் பெற விருப்பமுள்ளவர்கள் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்

 



EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது.


கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு EPFO உறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பென்ஷன் பெற இருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து அடுத்த 20 நாட்களுக்குள் உடனடியாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


அதேசமயம் அதிக பென்ஷன் பெறுவதற்கு மே 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிக பென்ஷன் பெற விருப்பமுள்ளவர்கள் உடனடியாக ஜூன் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் விண்ணப்பங்களில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement