Ad Code

Responsive Advertisement

மனைவி போன பின் கணவன் படும் துயர் !!!

 




கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.


ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே,கொடுமை....😴😴


தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன், 


தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன்,


மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லால் போகிறான்.


ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.


வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.


என்ன கொடுத்தார்களோ, 

எப்போது கொடுத்தார்களோ,

            கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.....


ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.....


தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.


இதெல்லாம் என் உறவுக்குள்ளே,

நட்பு வட்டத்திற்குள்ளே நான் கண்ட உண்மை.

துளியும் அதிகப்படியில்லை....


என் கணவர் காலை எட்டரை மணிப் போல,

சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்....


காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.....


இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்....


எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?


இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது....


மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!


சகோதரிகளே!!


யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!


உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!


முடிந்தவரை, 

         கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!

ஒரு தடவ தான வாழப்போறீங்க...


கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்...

மனுசனா பாருங்க...


                 - எழுத்தாளர் சிவசங்கரியின் வைர வரிகளில் இருந்து......


 படித்து,பிடித்து

பகிர்கிறேன்


என்றும் அன்புடன்

உங்களில் நான்..


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement