Ad Code

Responsive Advertisement

முதல்வர் கள ஆய்வு எதிரொலி..ஒரே நாளில் நான்கு துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

 




முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆய்வு சென்று திரும்பிய நிலையில் 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு சென்று திரும்பிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்திற்காக அண்மையில் பல மாவட்டங்களுக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அரசுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதியில் ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.


இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்து கீழ்காணுமாறு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் அனைத்துமே விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆய்விற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றமாக அறிய வருகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மற்ற மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்போதும் முதல்வருக்கு அதிகாரிகள் மீது அதிருப்தி ஏற்பட்டால் இந்த அதிரடி மாற்றங்கள் தொடரும் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement