Ad Code

Responsive Advertisement

பப்பாளி சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

 



பப்பாளி சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

மூட்டு வலி முதல் மாதவிடாய் சுழற்சியை சீராக்குவது வரை பெண்களுக்கு பப்பாளி தரும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். பப்பாளியின் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.


சுவை மிகுந்த பப்பாளியை காயாகவோ அல்லது பழமாகவோ சாப்பிடலாம். இதனுடைய கொட்டைகள் முதல் தோல் வரை அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பப்பாளி உடல் ஆரோக்கியத்துக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. பெண்கள் தங்களுடைய அன்றாட உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மாதவிடாயை சீராக்கும்

மாதவிடாய் சுழற்சியை சீராக்க பப்பாளி உதவும். இது உடலின் வெப்பத்தை அதிகரித்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டுகிறது, இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை தூண்டும். ஆகையால் ஒழுங்கற்ற மாதவிடாயை கையாளுவதில் பப்பாளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கீல்வாதத்தைத் தடுக்கிறது

முடக்கு வாதம் மற்றும் கீல்வாதத்தை எதிர்த்துப் போராட பப்பாளி உதவும். இதில் உள்ள சைமோபாபைன் என்ற நொதிகள் கீல்வாதத்தை தடுக்கின்றன.


மலச்சிக்கலை போக்கும்

பப்பாளியில் உள்ள ஃபோலேட், வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆகியவை உடல் இயக்கத்தை எளிதாக்குகின்றன. இது வயிறு மற்றும் குடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


முகப்பரு மற்றும் தீக்காயங்களின் வடுக்களை குறைக்கிறது

பப்பாளியில் இருந்து பெறப்படும் லேடெக்ஸ் முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்யும் உதவுகிறது. இதனுடன் தீக்காயங்களின் மீது பப்பாளியை பயன்படுத்தும் பொழுது வடுக்கள் குறையும்.


பல் வலிக்கு நிவாரணம் தரும்

பல் வலிக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் பப்பாளியும் அடங்கும். பல் வலியில் இருந்து நிவாரணம் பெற பப்பாளியை அரைத்து, பற்கள் மற்றும் அதன் ஈறுகளில் மசாஜ் செய்யலாம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement