Ad Code

Responsive Advertisement

UPI New Rules - அக்டோபர் 15, 2026 முதல் UPI-ல் வரும் அதிரடி மாற்றம்?




அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக (Merchant) UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வர்த்தக தள்ளுபடி விகிதம் (MDR - Merchant Discount Rate) கட்டணம் அமலுக்கு வருகிறது; ஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம், வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும்

வாடிக்கையாளர்களுக்கு (Consumers) கட்டணம் இல்லை: பொதுமக்கள் செய்யும் சாதாரண UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. நுகர்வோரிடம் இருந்து கூடுதல் கட்டணமோ அல்லது மறைமுகக் கட்டணமோ வசூலிக்க UPI செயலிகளுக்கு அனுமதி இல்லை


நபர்-நபர் (P2P) பரிமாற்றங்கள்: தனிநபர்கள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பும் பணம் எந்தத் தொகையாக இருந்தாலும் எப்போதும்போல முற்றிலும் இலவசம்


ரூ.2,000-க்கு கீழ்: ரூ.2,000-க்குட்பட்ட அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் எந்தக் கட்டணமும் இல்லை.


வியபாரிகளுக்கு (Merchants) புதிய விதி: ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வர்த்தக கட்டணம் (MDR) நிர்ணயிக்கப்பட்டுள்ளது (ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை வரம்பிடப்பட்டுள்ளது)


குறிப்பிட்ட துறைகள்: ரயில்வே, தொலைத்தொடர்பு (Telecom), இன்சூரன்ஸ் மற்றும் எரிபொருள் (Fuel) போன்றவற்றுக்கு ரூ.2,000-க்கு மேல் பிளாட் ரூ.5 கட்டணமாகப் பொருந்தும்

முதல்ல ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க.

👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge ம் கிடையாது. புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate.
அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge அ கட்ட வேண்டும். Customer அல்ல.
சரி… என்ன மாறப் போகுது?

👨‍👩‍👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா?
நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க. மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க. உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க. 
அதுக்கெல்லாம் Charge ₹0.
இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction. Amount எவ்வளவாக இருந்தாலும் permitted limits (ஒரு நாளைக்கு ₹1,00,000) க்குள் P2P UPI transfer தொடர்ந்து Free.

🛒 Shop / Business-க்கு Payment?
இங்கதான் மாற்றம் வருகிறது. Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4% வரும்.
உதாரணமா:
₹3,000 Payment → MDR ₹12
₹50,000 Payment → MDR ₹200
₹75,000 மற்றும் அதற்கு மேல ன்னா - Maximum MDR = ₹300.
₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது. 
Maximum ₹300 மட்டுமே.
ஆனா மறுபடியும் சொல்றேன்… இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை. Merchant தான் செலுத்த வேண்டும். Merchant இதை Customer மேல தனியாக UPI charge என்று போடவும் முடியாது.

🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்?
இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள்.

அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க.
அப்படி கிடையாது.

📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்?
இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு:
MDR = 0.02%
Maximum: ₹300 per transaction.
இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும்.

💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்?
இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது.
அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது.

🚆 Insurance, Fuel போன்ற Payments?
Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. 
இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க.
Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல.

📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா?
இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக் கூடாது.

📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்?
இந்த புதிய MDR framework: 15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது.

🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்?
நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
Friend-க்கு Money Transfer → FREE ✅
Family-க்கு Money Transfer → FREE ✅
Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅
SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅
₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅

முக்கியமான விஷயம்…
News headline: “UPI payments above ₹2,000 will be charged.”
இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா என்னோட Account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம்.
அதுதான் இல்லை.
சரியான புரிதல்: 

Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது. அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார்.

அதனால் October 15 க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும் போது… “ஐயையோ… Charge போயிடுமோ!”
என்று பயப்பட வேண்டாம் மக்களே!




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement