Ad Code

Responsive Advertisement

AM மற்றும் PM-க்கு உண்மையான அர்த்தம் என்ன?

 




ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவைகளுள் ஒன்று நேரம். நேரத்தை பொன்போல கருதி செயலாற்ற வேண்டும் என்று கூறுவர். அந்த அளவிற்கு நேரம் மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாததாகும்.


அத்தகைய பொக்கிஷமான நேரத்தை AM, PM என்று குறிப்பிடுவார்கள். இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 12 மணி நேரத்தை குறிக்க AM, PM பயன்படுத்தப்படுகிறது.


இரவு 12 மணி முதல் காலை 11 மணி வரை AM என்றும், காலை 12 மணி முதல் இரவு 11 மணி வரை PM எனவும் குறிப்பிடுகிறோம். ஆனால் AM, PM என்பதன் முழு வடிவம் என்ன என்று என்றாவது யோசித்திருக்கீர்களா?.


ஒரு நாளை 24 மணி நேரத்தை வைத்து மதிப்பிடுகிறோம். அதை இரண்டு பகுதிகளாக பிரித்து முதல் 12 மணி நேரத்தை காலை, மதியம் என்றும் இரண்டாவது 12 மணி நேரத்தை மாலை, இரவு என்று கூறுகிறோம்.


இவ்வாறு ஒரு நாளை இரண்டாக பிரிப்பதன் காரணமாக AM, PM என வகைப்படுத்துகிறோம். உதரணமாக 5 மணி என்றால் குழப்பமாக இருக்கும். 5 AM, 5PM என குறிப்பிடும்போது அது காலையா அல்லது மாலையா என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.


இப்போது AM, PM என்பதன் முழு விரிவாக்கம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது AM என்றால் Anti Meridiem, PM என்றால் Post  Meridiem என்று அர்த்தம்.


Ante meridiem என்றால் மதியத்திற்கு முன் என்றும், Post meridiem என்றால் மதியத்திற்குப் பிறகு என்றும் பொருள்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement