Ad Code

Responsive Advertisement

போன் மூலமாகவே LPG Gas eKYC செய்வது எப்படி? - How to Complete LPG Gas eKYC Online




சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC  என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் 16-ஆம் தேதிக்குள் eKYC நிறைவு செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எப்படி ஆன்லைனில்  eKYC செய்யலாம் என்பதை  அறிந்து கொள்ளுங்கள்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸதான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டரை தொடர்ச்சியாக விநியோகம் செய்து வருகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கேஸ் சிலிண்டருக்கு ekyc கட்டாயம்
அதே போல, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2,906க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதற்கிடையில், மத்திய அரசு eKYC செய்ய கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் நிரப்புதல், மானியம் மற்றும் பிற சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனர்கள் நுகர்வோரை ஆதார் அடிப்படையிலான ekyc சரிபார்ப்பை முடிக்க வலியுறுத்துகிறது. எனவே, நுகர்வோர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் கேஸ் சிலிண்டருக்கான ekyc-ஐ முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே, ekyc சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ekyc சரிபார்ப்பை முடிப்பது எப்படி?
அந்தந்த கேஸ் நிறுவனங்களின் செயலி அல்லது இணையதளம் வாயிலாக ekyc சரிபார்ப்பை முடிக்கலாம். அதாவது, இண்டேன் நிறுவனம் கேஸ் பயன்படுத்துவோர் indianoil one செயலி, பாரத் கேஸ் பயன்படுத்துவோர் hello bpcl, எச்பி கேஸ் பயன்படுத்துவோர் hp pay என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்தந்த நிறுவனத்தின் இணையதளம் மூலமாக செய்யலாம். 

முதலில் செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் மொபைல் எண், நுகர்வோர் எண் உள்ளிட்டு உள்நுழையவும்.

இதன்பிறகு, update ekyc என்பதை கிளிக் செய்து, உங்கள் 12 இலக்கு எண் கொண்ட ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

இதனை அடுத்து, பிளே ஸ்டோரிலிருந்து AadhaarFaceRD செயலியை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். 

உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கவும் ஆன்லைனில் முடிக்க தெரியாதவர்கள் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூலமே அல்லது கேஸ் நிறுவனத்திற்கு நேரடியாக சென்றும் இ கேஓய்சியை முடிக்கலாம்.


e-kyc செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் ekyc சரிபார்ப்பை முடிக்காவிட்டால், உங்களுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம். ekyc-ஐ முடிக்காத உஜ்வாலா திட்ட பயனாளிகள் வர்த்தக விலையில் சிலிண்டரை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுத்தும்.  சிலிண்டர் முன்பதிவு செய்வதிலோ அல்லது பிற சேவைகளை பெறுவதற்கோ  சிரமங்களை நீங்கள் சந்திக்கலாம். எனவே, குறித்த நேரத்தில் கேஸ் சிலிண்டருக்கான ஆதார் அடிப்படையிலான ekyc சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் இணைப்புக்கு ekyc ஏன் அவசியம்?
உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானியத் தொகை  நேரடியாக சரியாக நேரத்திலும் பெறுவதற்கு ekyc செய்து முடிக்க வேண்டும். ஒரே பெயரில் இயங்கும் போலியான இணைப்பு அல்லது எரிவாயு இணைப்புகள் கண்டறியப்பட்டு போலி இணைப்புகள் ரத்து செய்யப்படுகிறது. ekyc செய்வதன் மூலம் எரிவாயு விநியோகம் அல்லது இணைப்பு மாற்ற போன்ற செயல்முறைகளை எவ்வித இடையூறும் இல்லாமல்  மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement