Ad Code

Responsive Advertisement

செரிமான கோளாறு - வீட்டில் எளிதாக தயார் செய்யக்கூடிய பானங்கள்..!




சோம்பலான வாழ்க்கை முறை, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது மற்றும் பல போன்ற காரணங்கள் நமது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும்.


இன்று நாம் சந்திக்கக்கூடிய உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளில் மிகவும் பொதுவானதாக மாறியுள்ளது செரிமான கோளாறுகள். சோம்பலான வாழ்க்கை முறை, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது மற்றும் பல போன்ற காரணங்கள் நமது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரிப்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. உணவு சரியாக செரிமானம் அடைந்தால் மட்டுமே உடல் உறுப்புகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் சரியான முறையில் கிடைக்கும்.


செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கிறது என்பது அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் அளவை பொருத்து அமையும். நல்ல பாக்டீரியாக்களை விட கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாக இருந்தால் செரிமான ஆரோக்கியம் முழுவதுமாக பாதிக்கப்படும். செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, நமது மனநிலையில் தொடங்கி செரிமான ஆரோக்கியமானது நமது முழு உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி, யோகா, ஆரோக்கியமான உணவு போன்ற ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். செரிமானத்தை மேம்படுத்த உதவும் சில பானங்கள் பற்றி இப்போது காணலாம்.


கொம்புச்சா டீ: செரிமான அமைப்பில் உள்ள நுண்ணுயிரிகளை ஆரோக்கிரமாக வைப்பதற்கு இந்த ப்ரோபயாடிக் பானம் உதவுகிறது.


புதினா டீ: வயிறு கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெற புதினா டீ உதவுகிறது. ஒரு சில நேரங்களில், இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் (irritable bowel syndrome - IBS) அறிகுறிகளை தணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்து, பைல் சாற்றின் சீரான ஓட்டத்திற்கு உதவுவதன் மூலமாக உணவை செரிமானமடைய செய்து, வயிற்றின் வழியாக விரைவாக செல்ல அனுமதிக்கிறது.


கெஃபிர் (kefir): செரிமானத்திற்கு அவசியமான நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பதன் மூலமாக இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புளிக்க வைக்கப்பட்ட பால் கேஃபிர் எனப்படுகிறது. கேஃபிர் எனப்படும் இந்த புளிக்க வைக்கப்பட்ட பால் மலைப்பகுதிகளில் தோன்றியதாக சொல்லப்படுகிறது.


மோர்: உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய மிக ஆரோக்கியமான மற்றும் அதிக புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானம் என்றால் அது மோர் தான். மோரில் ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதன் காரணமாக இது செரிமானத்திற்கு உதவி செய்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, வயிற்றில் உள்ள அமிலத்தை தெளிவுபடுத்துகிறது. IBS பிரச்சனையினால் ஏற்படக்கூடிய வயிறு சார்ந்த நோய்களை தவிர்க்கவும் மோர் உதவுகிறது.


செலரி ஜூஸ்: வயிற்று உப்புசத்தை குறைக்கக்கூடிய டையூரிட்டிக்காக செயல்படும் தன்மை செலரி சாற்றுக்கு உண்டு. செலரியில் காணப்படும் காம்பௌண்டுகள் மற்றும் விக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இதனை செரிமான ஆரோக்கியத்திற்கு தகுந்த பானமாக மாற்றுகிறது.


செலரி ஜூஸ்: வயிற்று உப்புசத்தை குறைக்கக்கூடிய டையூரிட்டிக்காக செயல்படும் தன்மை செலரி சாற்றுக்கு உண்டு. செலரியில் காணப்படும் காம்பௌண்டுகள் மற்றும் விக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இதனை செரிமான ஆரோக்கியத்திற்கு தகுந்த பானமாக மாற்றுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement