Ad Code

Responsive Advertisement

முடி உதிர்வை தடுக்கும் வெங்காயம் - வீட்டிலேயே எண்ணெய் தயாரிப்பது எப்படி?

 



சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக முடி உதிர்வு உள்ளது. இதற்கு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மன அழுத்தம், மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவு, கெமிக்கல் கலந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும்.


முடி உதிர்வில் தொடங்கி, பொடுகு, முடி மெலிவது என முடி சார்ந்த பிரச்சனைகள் வரிசையாக ஏற்படும். இந்த பிரச்சனையை தவிர்க்க பல முயற்சியில் ஈடுப்பட்டாலும் சில நேரங்களில் எதுவும் பலன் தராது. இதற்கு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும் முடிக்கு ஊட்டமளிக்கும் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி, முடி உதிர்வை தடுக்கும் ஒரு எண்ணெய் தான் வெங்காய எண்ணெய்.


வெங்காயம் வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி முடி உதிர்வு பிரச்சனையை தடுக்கிறது. இப்படிப்பட்ட எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? மற்றும் எப்படி பயன்படுத்துவது? என பார்க்கலாம் வாங்க


தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 3

தேங்காய் எண்ணெய் - 1/2 கப்


தயாரிப்பது எப்படி?: 

அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றியதும் நறுக்கி வைத்த வெங்காய துண்டுகளை சேர்த்து 20 நிமிடங்களுக்கு எண்ணெயை கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து எண்ணெய் நன்றாக ஆறியதும் ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி பயன்படுத்தவும்.


பயன்படுத்தும் முறை: 

தயார் செய்து வைத்த எண்ணெய்யை ஸ்கால்ப் முதல் நுனி முடி வரை நன்கு தடவி 1 மணி நேரம் முதல் அல்லது ஒரு இரவு வரை தலையில் நன்கு ஊறவைத்து குளிக்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வர முடி உதிர்வது குறைவதோடு, பொடுகு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.


நன்மைகள்:

வெங்காயம் சல்பரின் நல்ல மூலமாகும். இது முடி வளர்ச்சிக்கு அத்தியாவசிய புரோட்டீன் தேவையான கெராட்டீன் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், வெங்காயத்தில் ஆண்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்திருப்பதால், இது உச்சந்தலையில் (Scalp) அனைத்து விதமான தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. 


குறிப்பாக, பொடுகு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கவும், பொடுகு பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வெங்காய எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர, முடியின் வேர்கள் வலுப்பெற்று முடியில் வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement