Ad Code

Responsive Advertisement

மக்களே உஷார்!!! - கள்ளநோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

 



நாட்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை 37% கூடுதலாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


ஆர்பிஐ வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் 1.18 லட்சம் எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இது முந்தைய ஆண்டைவிட 37.3%கூடுதல் என்றும் இதன் மதிப்பு ரூ.5.88 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 51,000 எண்ணிக்கையிலும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 32,660 எண்ணிக்கையிலும் வங்கிகள் கண்டறிந்துள்ளன.


2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 3,508 எண்ணிக்கையிலும் புழக்கத்தில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரிசர்வ் வங்கியின் நிகர லாபம் ரூ.2.7 லட்சம் கோடி என்று ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


கையிருப்பு தங்கத்தின் மதிப்பு 4.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 879 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 23,953 வங்கி மோசடிகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. தனியார் வங்கிகளில் மட்டும் 14,233 மோசடிகள் நடந்துள்ளன.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement