தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம், இதில் சில தளர்வுகளை கொடுக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியது. இதையடுத்து, தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறையை அடுத்த ஆண்டு ஒத்தி வைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதிய விதிகளை தளர்த்து குறித்து ஆலோசியுங்கள் என மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியது. மேலும், . குறைந்தபட்சம் ரூ.2லட்சம் வரையிலான கடனுக்கு புதிய விதிகளில் தளர்வு அளிக்க வலியுறுத்தியது.
இந்த நிலையில், நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ஒத்தி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மேலும் ரூ.2லட்சத்திற்கு கீழ் அடமானம் வைப்பவர்களுக்கு புதிய விதிமுறை பொருந்தாது எனவும், விதிமுறைகளை இறுதி செய்யும் முன்பு அனைத்து தரப்பின் கருத்துக்களும் கேட்டறியப்படும் என்றும் ரிசர்வ வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.
0 Comments