Ad Code

Responsive Advertisement

விஜய்க்கு மாலை அணிவித்த அரசு ஊழியர் 'சஸ்பெண்ட்'

 



மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் கதிரவன் மார்க்ஸ், த.வெ.க., தலைவர் விஜய் கட்சிக்காரராக மாறி மாலை அணிவித்ததால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஏட்டு கதிரவன் மார்க்ஸ். தீவிர விஜய் ரசிகரான இவர், விளக்குத்தூண் ஸ்டேஷனில் மாற்று பணியில் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.


அச்சமயத்தில் கொடைக்கானல் சினிமா படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் வந்தார். அவரை பார்ப்பதற்காக பணி நேரத்தில் 'பெர்மிஷன்' கேட்டு சென்ற அவர், 'மப்டி'யில் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றதோடு மாலையும் அணிவித்து வழியனுப்பி வைத்தார்.


இது குறித்த வீடியோ கமிஷனர் லோகநாதனின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து கதிரவன் மார்க்ஸை நேற்று மாலை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement