போலி என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உயர்தரமான, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், மத்திய விசாரணை அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகள் போன்றே, கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. உயர் தரத்தில் அவை அச்சிடப்பட்டுள்ளன. சாதாரணமாக பார்க்கும்போது அதை கள்ள நோட்டு என்று கண்டறிய முடியாது.
ஆனால், ஒரு சிறிய தவறு அதில் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 'ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா' என்பதில், 'ரிசர்வ்' என்ற வார்த்தையில் உள்ள, 'இ' என்ற எழுத்து, தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.
இதனால், வங்கிகள் உள்ளிட்டவை, 500 ரூபாய் நோட்டுகளை பெறும்போது இதை கவனத்தில் வைத்து வாங்க வேண்டும்.
தற்போதைய நிலையில், எவ்வளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என்ற தகவல் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments