Ad Code

Responsive Advertisement

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா

 



உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என நிதி ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார். 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது.


இது குறித்து நிடி ஆயோக் தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. நாம் உறுதியாக இருந்தால், 3 ஆண்டுகளில், நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ ஐபோன்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று கூறியது குறித்து கேட்டபோது,


​​''வரி விதிப்பில் மாற்றம் வரலாம். அது குறித்து ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தியாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்'' என சுப்பிரமணியம் பதில் அளித்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement