Ad Code

Responsive Advertisement

நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு - பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்

 




2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமூகப்பணி, வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டில் பத்ம ஸ்ரீ விருது பெறும் 12 விருதாளர்கள் அறிவிக்கப்பட்டது. அவர்களில் சிலர்,


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தவில் இசைக்கலையில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் வாய்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம விபூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.




பத்ம விருதுகளைப் பொறுத்தவரையில், இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் பெருகின்றனர். அந்த வகையில், தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித் குமார், விளையாட்டு பிரிவில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement