Ad Code

Responsive Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் காலம் நீட்டிப்பு

 



பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


இன்றுவரை 1.87(85%) கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு, விலையில்லா வேட்டி, சேலை ஆகியன வழங்கப்பட்டன. கடைகளில் கூட்டநெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 8- ஆம் தேதி குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.


அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

இதைத் தொடா்ந்து கடந்த 9- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது.


இந்தத் திட்டத்தால் 34, 793 நியாய விலைக் கடைகளிலுள்ள 2 கோடியே 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போா் பயன்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement