Ad Code

Responsive Advertisement

24.01.2025 - வெள்ளிக்கிழமை - சிறந்த நம்பிக்கையான வார்த்தைகள்

 



🪷அனைவரிடமும் காலத்தை சொல்லும் கடிகாரங்கள் உள்ளது. சில கடிகாரங்கள் பின்னோக்கி செல்லும் அதற்குப் பெயர் *ஞாபகம்.* சில கடிகாரங்கள் முன்னோக்கி செல்லும் அதற்குப் பெயர் *கனவுகள்.*


🪷ஒரு வீடு எத்தனை பெரியது என்பது முக்கியமல்ல!, அந்த வீட்டில் எத்தனை *சந்தோஷம்* இருக்கிறது என்பதே முக்கியம்..


🪷அனைவரும் தவறுகள்தான் வெற்றிக்கு முதல் படி என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. *அந்தத் தவறை திருத்திக் கொள்வதே வெற்றிக்கு முதல் படி* ஆகும்.


🪷சாதாரண மனிதர்கள் நினைப்பது! வாழ்க்கையில் இருப்பது இரண்டுதான்! ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி என்று,. 


🪷வெற்றி பெற்றவர்களுக்கு தான் தெரியும் நான்கு தோல்விகளுக்குப் பிறகு கிடைப்பதே வெற்றி என்று.


🪷இலக்கிலிருந்து கண்களை எடுக்கவே எடுக்காதே.


🪷தோல்வி என்ற எண்ணத்தை விட பயம் தான் எத்தனையோ கனவுகளை கொல்கிறது.


🪷உங்களை பின் தொடர்பவர்கள் அனைவரும் உங்கள் விசிறிகள் அல்ல.


🪷சுவர்களும், தடுப்புகளும், உங்கள் தோல்விக்காக ஏற்பட்டதல்ல. ஒரு விஷயம் உங்களுக்கு எத்தனை தேவைப்படுகிறது என்று அறிந்து கொள்வதற்காகவே சுவர்களும் தடுப்புகளும் இருக்கிறது.


🪷உங்கள் வாழ்க்கை மாறுவதற்கு அதிர்ஷ்டம் ஒரு காரணமல்ல. மாற்றமே உங்கள் வாழ்க்கையின் மாற்றத்திற்கான காரணம்.


*🪷உங்கள் வாழ்க்கையை ஒரே ஒருவரால் தான் மாற்ற முடியும். அது நீங்கள்.*


*🪷வெற்றி உங்களைத் தேடி வராது. நீங்கள்தான் வெற்றியைத் தேடி செல்ல வேண்டும்.*


🪷அனைத்துமே முடிவிலேயே சரியாகத்தான் இருக்கும். அது சரியாக இல்லை எனில் அது முடிவல்ல.


🪷வெற்றிக் கனியை பறிக்க லிஃப்ட் என்பது இல்லை.மாடிப்படிகளில் ஏறிச் சென்றுதான் நீங்கள் ப றிக்க வேண்டும்.


*🪷தோல்வி என்பது மிகப்பெரிய தோல்வியே அல்ல!. முயற்சி செய்யாதது தான் மிகப்பெரிய தோல்வி.*


🪷உலகத்தில் யார் ஒருவர் மீதும் அதிகமான நம்பிக்கை வைக்காதீர்கள். ஏனெனில் இருட்டிலே உங்கள் நிழல் கூட உங்களைப் பின் தொடராது.


🪷ஒவ்வொரு ஆசானும் ஒரு காலத்தில் மாணவனாக தான் இருந்தார். வெற்றி பெற்ற அனைவரும் ஒரு காலத்தில் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் அனைவருமே கல்வி என்ற பாலத்தை கடந்து வந்துள்ளனர்.


🪷ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமமானது. ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமமானவன்.


┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*


*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

 நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...*


 *இந்த நாள் இனிய நாளாகட்டும்*


*வாழ்க 🙌 வளமுடன்*




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement