Ad Code

Responsive Advertisement

முதுகு வலி - தீர்வுகள்

 



பொதுவாக  வாயு பொருளை அதிகமாக சாப்பிட்டாலும் உதாரணமாக பருப்பு மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற காரணத்தாலும் முதுகு வலி உண்டாகிறது .இந்த வலியை எப்படி தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்


1.இந்த முதுகு வலிக்குபுகை பிடிப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது .சிறுநீர் ,வாந்தி ,கண்ணீர் ,ஏப்பம் ,மலம் போன்றவற்றை அடக்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது  


2.இந்த வலியானது முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.


3.ஒருவருக்கு பல்வேறு காரணத்தால் உண்டாகும் மனஅழுத்தமும் முதுகு வலியை ஏற்படுத்தும்.


4.மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகும் போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்து அந்த இடத்தில் வலி ஏற்படும்


5.மேலும் ஒருவரின் கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால் கூட முதுகில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.


6.அதனால் கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.


7.தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகு வலிக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த காயங்கள் வலியை ஏற்படுத்தும் போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகி .அது வலியை அதிகப்படுத்தி நம்மை தீராத தொல்லையில் ஆழ்த்தி விடும் .


முதுகு வலி ஏற்படுவதற்கான சில காரணங்கள்: 

  • பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள்
  • சிறுநீரக நோய்த்தொற்றுகள்
  • காயம்
  • மூட்டு பிரச்சனைகள்
  • தசை விகாரங்கள்
  • அதிக நேரம் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்வது
  • பதற்றம்
  • வட்டு அறுவை சிகிச்சை
  • திரிபு

முதுகு வலி ஏற்படுவதற்கான சில காரணங்கள் தெரியாதே இருக்கலாம். முதுகு வலியை புறக்கணித்தால், மற்ற சிக்கல்கள் ஏற்படலாம். 

முதுகு வலிக்கு சிகிச்சை பெற, மருத்துவரை அணுக வேண்டும். 


முதுகு வலிக்கு சில வழிமுறைகள்: 

வெந்நீர் அல்லது ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம், உடற்பயிற்சி செய்யலாம், தோலை உறுத்தும் ஆடைகளை அணியாமல் இருக்கலாம், குளித்து உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளலாம்




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement