அவனியாபுரத்தில் 3ஆம் இடம் பிடித்தவரை இன்றைய ஜல்லிக்கட்டில் இருந்து வெளியேற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் , 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். தொடர்ந்து அலங்காநல்லூர் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்தெடுக்கப்படும் காலைக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் வழங்கப்படுகிறது, சிறந்த வீரராக தேர்தெடுக்கப்படும் மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் வழங்கப்படுகிறது. மேலும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, மெத்தை, அண்டா, பித்தளை பொருட்கள் என மேலும் பல பரிசு பொருட்கள் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் கண்ட கார்த்தி என்பவர் அலங்காநல்லூரிலும் களம் கண்டார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 126ஆம் எண் டி ஷர்ட் அணிந்து விளையாடிய கார்த்தி மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அவனியாபுரத்தில் 3ஆம் இடம் பிடித்தவரை இன்றைய ஜல்லிக்கட்டில் இருந்து வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மூன்றில் ஏதாவது ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமே பங்கேற்க வீரர்களுக்கு அனுமதி என்பதால் வெளியேற்றம் செய்யப்பட்டார்.
0 Comments