Ad Code

Responsive Advertisement

முளைக்கீரை - பலன்கள்

 



முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.


முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை  மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய  நோய்கள் குணமாகும். 


அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும். முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிரங்கு முதலிய  நோய்கள் குணமாகின்றன

 

சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப காய்ச்சலை தணிக்க வல்லது. 

 

முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை  சரியாகும்.


முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

 

முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த மூலம்  போன்றவை சரியாகும்.

 

இளைத்த உடம் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைப் போக்கும், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

 

கண் எரிச்சலைப் போக்கும். நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை  குணமாக்கும் தன்மை கொண்டது.


முளைக்கீரையில் காணப்படும் சத்துகள்:


வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. மேலும், இரும்புசத்து , தாமிரச்சத்து, சுண்ணாம்புச் சத்து, ( கால்சியம், பாஸ்பரஸ்) போன்ற தாதுக்களும் செரிந்து காணப்படுகின்றன. இருப்பினும் வைட்டமின் ஏ ன் அளவினை இக்கீரை கணிசமாக கொண்டிருப்பதால் இக்கீரை கண்பார்வை பிரச்னைக்கு, ஓர் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.


முளைக்கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்:


பீட்டா சயனின், பீட்டாசாந்தைன், பீட்டாலைன், பிலேவோனாய்டுகள், ஆந்தோசயனின் அமராந்தைன் போன்ற நன்மை அளிக்கும் மூலக்கூறுகளை முளைக்கீரை கொண்டுள்ளது.


முளைக்கீரையின் மருத்துவப் பண்புகள்:


முளைக்கீரையினை மூளை வளர்ச்சி பாதிப்படைந்தவர்கள், வயிற்றுப்புண் பிரச்னை உடையவர்கள் மற்றும் பித்தம் அதிகரிப்பினால் பாதிப்படைந்தவர்கள் என பலரும் தவறாது உணவில் சேர்த்து பயன்பெறலாம். மேலும், அனைத்து வகையான காய்ச்சல், செரிமான பிரச்னை, ரத்தசோகை மற்றும் முகம் பொலிவினை அதிகரிக்க முளைக்கீரை பயன்படுகிறது. பொதுவாக சருமநோய்கள் பிரச்னைகளுக்கு முளைக்கீரையினை உணவில் சேர்த்து பயனடையலாம்.


மேலும், முளைக்கீரையின் தண்டுகளை சிறியதாக்கி, சீரகத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி, நன்மை பெறலாம். குறிப்பாக, மூலநோய் பிரச்னை உடையவர்கள் முளைக்கீரையுடன் துத்திக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வர மூலம் சம்பந்தமான பிரச்னைகளை நீக்கமுடியும்.இளைத்த உடம்பு தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைப் போக்கும், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.


கண் எரிச்சலுக்கு மருந்தாகவும், நரம்பு தளர்வினை நீக்கி நரம்புகளின் செயல்களை மேம்படுத்தவும் உதவுகிறது. முளைக்கீரையின் மருந்து பயன்களை பதார்த்த குணபாடம் கீழ்கண்டவாறு கூறுகிறது.முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.


முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும். நரம்புத் தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும். முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement