Ad Code

Responsive Advertisement

ரவுடியுடன் பொங்கல் விழா - 3 போலீசார் அதிரடி பணியிட மாற்றம்

 




திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலையத்தில் கடந்த 15ம் தேதி போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடினர். 


இந்நிலையில் அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் ஒருவர் கொலை வழக்கில் கைதாகி விடுதலையாகி உள்ளார். தொடர்ந்து இவரது பெயர் ரவுடி லிஸ்டில் உள்ளதாக கூறப்படுகிறது.


இவரை பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த போலீசார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் திருப்பத்தூர் எஸ்பி ஸ்ரேயா குப்தாவிற்கு புகார் சென்றுள்ளது. 


இதையடுத்து விசாரணை நடத்திய நிலையில், கந்திலி காவல் நிலைய எஸ்ஐக்கள் அஜித்குமார், கார்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி நேற்று உத்தரவிட்டுள்ளார். இது போலீசார் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement