Ad Code

Responsive Advertisement

Pink Auto விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

 



சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.


இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.


அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல்துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: மணிப்பூரில் கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்!! உடல் கூறாய்வில் அதிர்ச்சி


இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ. 23 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், டிச. 10 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் அறிவித்துள்ளார்.


இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகள்:


i.பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


iii. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.


iv. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


v. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


vi. சென்னையில் குடியிருக்க வேண்டும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement