Ad Code

Responsive Advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவது ஏன்? - மனைவி சாய்ரா பானு விளக்கம்!

 




சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர். இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்திருந்தார்.


29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமானும் அதனை உறுதி செய்திருந்தார். இந்த அறிவிப்பு ரகுமானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.


இந்த சூழலில், இவர்களது பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.


அதில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அவதூறு கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு, விவாகரத்து முடிவு குறித்து ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். 


எனக்கு கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்பதால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சைக்காக தொடர்ந்து மும்பையில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாக ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக சாய்ரா பானு தகவல் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement