♥ விஜய் அரசியலுக்கு வருவது நல்லது.. காரணம் இந்தத் தலைமுறை ரசிக குஞ்சுகளும், சினிமாக்காரர்களும் தரமான செருப்படி ஒன்றைக் கண்டால் தான் பலவற்றைப் புரிந்து கொள்வார்கள்... குறிப்பாக மக்களைப் புரிந்து கொள்வர்.. அதற்கு விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான்...
♥ "முதல்வருக்கு வயதாகிவிட்டது.. நிறைய வருடங்கள் அவரால் அரசியலில் இருக்க இயலாது.. அதிமுக என்ற ஒன்றே இப்போது கிடையாது... பாஜகவிற்கு இன்னும் மக்கள் ஆதரவு இல்லை.. மற்ற கட்சிகள் எல்லாம் சிறு சிறு கட்சிகளாக உள்ளன.. எனவே உதயநிதி மட்டும் தான் இருக்கிறார்.. அவரோடு ஒப்பிடும்போது அவரை விட நாம் பெரிய நடிகர்.. அவரை விட ரசிகர்கள் நமக்கு அதிகம் எனவே நாம் வந்துவிடலாம்" என்று கணக்கிட்டு வந்திருக்கிறார் விஜய்.. வெற்றி பெறுவதற்கு எப்பொழுதுமே தன்னை நம்ப வேண்டுமே தவிர பிறரை நம்பி களத்தில் வரக்கூடாது என்பது ஒரு விஷயம் என்றாலும், விஜய் நினைத்தபடியே வைத்துக்கொண்டு நாம் அவரின் கான்செப்ட்டைப் பார்க்கலாம்..
♥ விஜய் ஓர் அறியப்பட்ட நடிகர்.. எனவே சென்னை நீங்களாக எங்கு நின்றாலும் விஜய் ஒரு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.. உதயநிதியை விடவும் சினிமாவிலும், ரசிகர் பட்டாளத்திலும் விஜய் தான் டாப்.. அதை யாரும் மறுக்க இயலாது.. அதே நேரம் விஜய் நிறுத்தும் வேட்பாளர்களான ராமசாமி, குப்புசாமி, ஆல்பர்ட், முகமது பாஷா போன்ற நபர்கள் எல்லாம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா?? திருச்சியில் கே.என்.நேரு, திருவண்ணாமலையில் ஏ.வா.வேலு, தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணி என்பது போல விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளனரா?? எனும் பொழுது விஜயா எப்படி மற்ற இடங்களில் வெல்ல முடியும்?? விஜய் நிறுத்தும் வேட்பாளர்கள் எப்படி ஐ.பெரியசாமி, வேலுமணி, பெரிய கருப்பன், சக்கரபாணி, தங்கம் தென்னரசு, நத்தம் விஸ்வநாதன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் போன்றவர்களை தோற்கடிக்க முடியும்??
♥ வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு மக்கள் நலம் தான் முக்கியம் என்று விஜய் செயல்படவுள்ளார் என்றால், அவர் தன்னுடைய புகழை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போன்ற ஒன்றை ஆதரித்து விட்டு போகலாமே.. ஆக அப்படி இல்லை எனும் போது விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஒரே காரணம் பதவி ஆசைதான் என்பதைத் தவிர, வேறு ஏதுமில்லை... மசாலா படங்களில் நடித்து மிகப்பெரிய வசூலை அந்த படங்கள் பெற்றபின் இயல்பாகவே பெரிய நடிகர்களுக்கு வரும் ஒரு மனநிலை தான் அவருக்கு தற்போது வந்துள்ளது... தான் தான் உலகிலேயே பெரிய ஆள் எனும் மனநிலை.. அது தேர்தலுக்குப் பின் மாறும்..
♦ விஜய் பேசுகையில் பிளவுவாதத்திற்கு எதிராகத்தான் எங்கள் அரசியல் இருக்கும் என்கிறார் .. ஆனால் ஒரு முறை கூட பி.ஜே.பி என்ற பெயரை அவர் பயன்படுத்தவில்லை... அவ்வளவு பயம் இருப்பவர் எதற்கு அவ்வாறு பேச வேண்டும்?? உண்மையிலேயே விஜய்க்கு முதலில் அவ்வளவு தைரியம் இருக்கிறதா? என்பதே ஒரு கேள்விக்குறிதான்... சின்ன சின்ன விஷயங்களுக்காகவே சமாதானம் போகிறவர், பயந்து போய் மன்னிப்பு கேட்பவர்தான் இவர்... இவரால் நிச்சயம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை சமாளிக்க இயலாது..
♦ இவை எல்லாவற்றையும் விட, முற்போக்கு கும்பல் உருட்டும் முரட்டு உரட்டுகள் தான் மிகப்பெரிய கொடுமை... "விஜய் அம்பேத்கர் படத்தை வைத்து விட்டார்.. விஜய் பெரியார் படத்தை வைத்து விட்டார்.. விஜய்க்கு யாரை வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.. விஜய்க்கு யாரை வைக்கக்கூடாது என்று தெரிந்திருக்கிறது.." என்று மிகப் பெரிய உருட்டுகளை உருட்டி வருகிறார்கள் .. முதலில் விஜய் அவர் துறையில் நடக்கும் விஷயங்களை கண்டித்தாரா?? படிப்படியாக வளர்ந்தாரா?? இதுவரை ஏதேனும் சமூக விஷயத்தில் பங்கேற்று இருக்கிறாரா?? என்பதையெல்லாம் ஒருமுறை கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை இந்த உருட்டு முற்போக்கு கும்பல்...
♦ அடிப்படையிலேயே விஜய் அரசியல் & பொது அறிவில்லாதவர்.. துப்பாக்கி பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் வீடியோவை எடுத்துப் பாருங்கள்.. ஒருபோதும் விஜய்க்கு கதையைக் கூட சுயாமாகத் தேர்ந்தெடுக்கத் தெரியாது.. சுயமாக எந்த ஒன்றையும் அமைத்துக் கொள்ளத் தெரியாதவர் தான் விஜய்.. விஜய்க்கு எல்லாமும் அமைத்துக் கொடுத்தவர் அவர் பெற்றோர் தான்.. அதற்குப் பின்பு புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டல்களைக் கேட்டு செயல்பட்டு வருகிறார்... ஒரு மரண தோல்விக்கு பின் தான் அவருக்கு தான் யார் என்பதே தெரிய வரும்..
♦ இயல்பிலேயே அமைதியான இயல்பிற்குச் சொந்தக்காரரான விஜய் ஒருபோதும் மற்றவர்களிடம் தேவையற்று பேசுவதில்லை என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் ஆடியோ லான்ஞ் வந்தால் மட்டும் ஆடுவார், பாடுவார், வாய்கிழிய பேசுவார்.. "இந்த நடிப்பை படத்தில் காட்டி இருந்தால் நல்ல நடிகன் என்ற பெயராவது வந்திருக்குமே அண்ணா" என்று சொந்த ரசிகர்களே கலாய்க்கும் அளவுக்குத் தன் இயல்பை மீறீ ஆடியோ லான்ஞ்சில் நடிப்பார்.. அதுபோல இன்று மேடையில் நடிக்கிறார்...
♦ "ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் எவ்வளவு பெரிய விஷயம் பாருங்கள்" என்று பல ஆஃப்பாயில் அறிவாளிகள் உருட்டி வருகின்றனர்.. அதில் உண்மை உள்ளதா என்றால் அதுவே முதலில் பொய்.. ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்கினார் என்பது அவருக்கும், தயாரிப்பாளருக்கும், வருமானவரித்துறைக்கும் தான் தெரியும்.. எனவே அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.. அதே நேரம் இத்தனை தியாகம் செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்று சொல்வதை நம்மால் ஏற்க இயலாது... காரணம் வருடத்திற்கு ஒரு படம் செய்வது விஜயின் ஸ்டைல்.. அந்த அடிப்படையில் இந்த வருடம் Goat ரிலீஸ் ஆகிவிட்டது.. அடுத்த வருடம் H.வினோத் படம் ரிலீஸ் ஆகும்... 2026 தேர்தல் முடிவு மே மாதம் வந்துவிடும்.. அது முடிந்த பின் நிச்சயம் நடிக்கத் தான் வரப்போகிறார் விஜய்.. எனவே விஜய் இழக்கப்போவது அதிகபட்சம் 6 மாதங்களைத் தான்... இதற்கு ஏன் இத்தனை உருட்டுகள்..
♦ எனவே விஜய்யின் த.வெ.க கட்சி மற்றுமொரு கட்சி என்று கூட குறிப்பிட இயலாது.. ஏனென்றால் அடிப்படை தகுதியும், அறிவும் இல்லாத ஒருவரின் தலைமையின் கீழ் எந்த ஒரு கட்சியும் இருக்காது.. அந்த அடிப்படையில் மிக விரைவில் முடிவுரையை சந்திக்கவுள்ளது த.வெ.க... இதனால் நலம் பெறப்போவது மக்கள் என்றால், இதனால் பாடம் கற்கப் போவது ரசிக குஞ்சுகளும், சினிமா துறையினரும் தான்.. விஜய்க்கு விழும் அடி இனி 25 வருடங்களுக்கு எவரும் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வரவே பயப்படும் அளவுக்கு தான் இருக்கும்..
♦ அதற்காக சினிமாத்துறையில் இருந்து யாரும் வரக்கூடாதா? என்றால் அப்படி இல்லை.. எவர் வேண்டுமானாலும் எத்துறையிலிருந்தும் வரலாம்.. ஆனால் எந்த ஒரு அடிப்படை விஷயமும் செய்யாமல், அரசியல் அரிச்சுவடி கூடத் தெரிந்து கொள்ளாமல், அவர்கள் துறையிலுள்ள பிரச்சினைகளையே களையாமல் வெறும் சினிமாவால் கிடைத்த பாப்புலாரிட்டி மூலமாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்??
♦ நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் சொல்வது எம்ஜிஆர் வரவில்லையா? என்பதைத் தான்.. எம்ஜிஆர் திமுகவில் இருந்து கொள்கை பரப்பி, எம்.எல்.ஏ ஆகி, பொருளாளர் ஆகி அரசியலின் அடிப்படையை உணர்ந்தவர்.. திமுகவை விட்டு வெளியேறி கட்சி ஆரம்பிக்கையில் திமுகவிலிருந்து தொண்டர்கள் போனார்கள், பல மாவட்ட/ வட்ட/ கிளை அளவிலான நிர்வாகிகள் போனார்கள்.. அதனால் வெற்றி பெற்றார்.. வெறும் பாப்புலாரிட்டியால் வெல்லவில்லை.. இது விஜய்க்கும், அவரின் ரசிக குஞ்சுகளுக்கும் தெரிய வாய்ப்பில்லை...
♦ எனவே மீண்டும் சொல்கிறேன் விஜய் அரசியல் வருகையால் நலம் பெறப்போவது மக்கள் தான் ஆனால் பெரும் பாடம் கற்கப் போவது ரசிக குஞ்சுகளும், சினிமா துறையினரும் தான்.. விஜய்க்கு விழும் அடி இனி 25 வருடங்களுக்கு எவரும் சினிமா துறையில் இருந்து வரவே பயப்படும் அளவுக்கு தான் இருக்கப்போகிறது.. நான் பந்தயம் வேண்டுமானாலும் கட்டிச் சொல்கிறேன் 2021ல் திமுக ஜெயித்த இடங்களை விட, 2026இல் திமுக அதிக இடங்களை ஜெயிக்கும்.. விஜயால் ஒரு மேஜிக்கையும் ஏற்படுத்த இயலாது..
♥ பா.அருண்குமார், பொள்ளாச்சி.
2 Comments
RS200credited
ReplyDeleteஅட யாருடா நீ கோமாளி. திமுக கொத்தடிமையே. உன்ன மாதிரி யாராலும் திமுக சொம்பு தூக்க முடியாது
ReplyDelete