இந்த எண்ணெய் குளியலை கங்கா ஸ்நானம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் எந்த நீர் நிலையில் நீராடினாலும், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை என்பது பெரும்பாலும் ஒரு நாள் மட்டும் தான்; தீபாவளிக்கு நோன்பு கொண்டாடும் சிலருக்கு இரண்டு நாட்களாகக் கொண்டாடப்படும். ஆனால், இந்தியா முழுவதும் அண்டை மாநிலங்களில், தீபாவளி 3 முதல் 5 நாட்கள் கொண்டாடப்படும்.
தீபாவளி அமாவாசை அன்று அல்லது அதற்கு முந்தைய நாள் தமிழ்நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த நாளில், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும். 2024 தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் என்று சொல்லப்படும் எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன?
துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகளில் நீராடுவது பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். கங்காதேவியை தன்னுடைய பாவங்களை போக்க புண்ணிய நதிகளில் நீராடுவார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
நரகாசுரன் இறக்கும் தருவாயில் நான் செய்த தவறுகளை எண்ணி வருந்தி, நான் இறந்த நாளை மக்கள் அனைவரும் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றுக் கொண்டான்.
எனவே, நரகாசுரனின் தாயான பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, மகாலக்ஷ்மி எண்ணையிலும், கங்கை தண்ணீரிலும், மகா விஷ்ணு புத்தாடைகளிலும், தன்வந்திரி இனிப்பு மருந்திலும், உறைவதாக ஐதீகம்.
எனவே தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பு, அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்தானம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
இந்த எண்ணெய் குளியலை கங்கா ஸ்நானம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் எந்த நீர் நிலையில் நீராடினாலும், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
2024 தீபாவளி எண்ணெய் குளியலுக்கு ஏற்ற நேரம்
அக்டோபர் 31, அதிகாலை 3:30 மணிக்கு மேல் 6 மணிக்குள் எண்ணெய் வைத்து குளித்து விட வேண்டும். சூரிய உதயம் தோன்றுவதற்குள் வீட்டில் உள்ளவர் அனைவரும் குளிக்க வேண்டும்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நலங்கு வைத்து தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். பூஜை அறையில் புத்தாடைகளை வைத்து, குடும்பத்தின் பெரியவர்களிடம் ஆசி பெற்று புத்தாடை அணிய வேண்டும்.
லட்சுமி பூஜை முஹூர்த்தம்
இந்த முறை அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களில் அமாவாசை திதி வருவதால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேத நாட்காட்டியின்படி, இந்த முறை அமாவாசை தேதி அக்டோபர் 31 ஆம் தேதி மதியம் தொடங்கி, மறுநாள் அதாவது நவம்பர் 1 ஆம் தேதி மாலை முடிவடைகிறது. அமாவாசை திதி, 31ம் தேதி மதியம் 2:40 மணிக்கு துவங்கி, நவம்பர் 1ம் தேதி மாலை 4:42 வரை நடக்கிறது. இதன் பிறகு பிரதிபத திதி நடைபெறும்.
வேத நாட்காட்டியின்படி, அமாவாசை திதியில் தீபாவளியன்று லட்சுமி பூஜையும், பிரதோஷ காலத்தின் போது மாலையிலும் இரவிலும் அதாவது சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இரவு வரை லட்சுமி பூஜை செய்வது வழக்கம்.
அத்தகைய சூழ்நிலையில், தீபாவளியை அக்டோபர் 31 ஆம் தேதி அமாவாசை திதி, பிரதோஷ கால மற்றும் நிஷித கால முகூர்த்தத்தில் கொண்டாடுவது மிகவும் மங்களகரமானது. அமாவாசை திதி நவம்பர் 1ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளியைக் கொண்டாடுவது அசுபமாகவும் மங்களகரமற்றதாகவும் கருதப்படுகிறது.
தீபாவளி அன்று மாலை, லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானை சடங்கு முறைகளுடன் மக்கள் வணங்குகின்றனர். நல்ல நேரத்தில் பூஜை செய்வதன் மூலம், லக்ஷ்மி தேவி எப்போதும் வீட்டிற்கும் குடும்பத்திற்கும் தனது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.
இது வீட்டிற்கு செல்வத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வரும். மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். அக்டோபர் 31ம் தேதி மாலை 6.27 மணி முதல் இரவு 8.32 மணி வரை பூஜை செய்ய உகந்த நேரமாகும்.
0 Comments