Ad Code

Responsive Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயில் - கனகசபை தரிசனம் செய்வதை தடுக்க கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

 




: 'ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது' என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு இன்று (ஆக.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற நேரங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை' என தீட்சிதர்கள் தரப்பு தெரிவித்தது.


இதனையடுத்து, 'ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது' என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement