Ad Code

Responsive Advertisement

தமிழர்களை போல மிகவும் திறமையான, பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது - செயின்ட் கோபின் சிஇஓ புகழாரம்

 



தமிழ்நாட்டில் இருப்பவர்களை போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று செயின்ட் கோபின் நிறுவன சிஇஓ கூறினார்.


சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு-2024ல் செயின்ட் கோபின் நிறுவனத்தின் சிஇஓ சந்தானம் பங்கேற்று பேசியதாவது: நல்ல நாடு, நல்ல மக்கள், நல்ல அரசு, திறமை மிக்கதுதான் தமிழ்நாடு. 24 வருடத்திற்கு முன் ரூ.500 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்தோம். 


தற்போது ரூ.5000 கோடி வரை முதலீடு செய்கிறோம். இதுவரை 6000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்துள்ளோம். கடந்த 11 மாதத்திற்கு முன்பு ரூ.3400 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தோம்.


ஒட்டு மொத்தமாக 8000 கோடி ரூபாய்க்கு தமிழக அரசுக்கு முதலீடு செய்ய உள்ளோம். இந்தியாவில் எங்களது நிறுவனம் முதலீடு செய்ததில் 60% தமிழ்நாட்டில் தான் முதலீடு செய்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இருப்பவர்களை போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. 


மேம்பட்ட கல்வித்தரம் மற்றும் திறன்மிக்கவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு முதலீட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, அவர்களுடன் நல்ல நட்புறவை கொண்டுள்ளது. சொல்வதை செய்கிறது; செய்வதை சொல்கிறது. அனைத்து வசதிகளுடன் இருப்பதால் இந்த மாநிலம் உற்பத்தி செய்வதற்கான சிறந்த இடமாக விளங்குகிறது.


முதலீட்டு நிறுவனங்களுக்கான எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல் அதற்கான தீர்வை இந்த அரசு ஈட்டித் தருகிறது. முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் தமிழ்நாட்டில்தான் அதிக வெளிப்படைத்தன்மையுடன் உள்ளன. எங்களிடம் பணிபுரியும் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களும் தமிழகம் பாதுகாப்பாக பணிபுரிவதில் சிறந்த இடமாக இருப்பதாக கருத்துக்களை கூறுகின்றனர். இவர் அவர் கூறினார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement