'நீதிமன்றங்களை மக்கள், கோவில் என்று சொல்வது, நீதிபதிகள் அதன் கடவுளாக நினைத்துக் கொள்ளும் பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறது,' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார்.
தேசிய நீதித்துறை அகாடெமியின் மண்டல மாநாடு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:
'யுவர் ஹானர், லார்ட்ஷிப், லேடிஷிப்' என்று நீதிபதிகளை குறிப்பிடுகின்றனர்.
சில நேரங்களில் மக்கள் நீதிமன்றங்களை, நீதியின் கோவிலாக குறிப்பிடுகின்றனர். இது மிகப் பெரும் ஆபத்து. அப்படி பார்த்தால், நாங்கள் அந்தக் கோவிலின் கடவுள்களாக நினைத்துக் கொள்ளும் அபாயத்தை உருவாக்கிவிடும்.நீதிமன்றங்களும், நீதிபதிகளும், மக்ளுக்கு சேவையாற்றுகின்றனர்.
அவ்வாறு மக்களை சேவையாற்றுவதாக நினைக்கும்போது, பரிவு, பச்சாதாபம் உள்ளிட்டவற்றுடன் நீதிமன்றங்கள் வழக்கை பார்க்க முடியும்.
குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும்போது, மனிததன்மையுடன் கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர்தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் உயரிய கடமையுடன் இது இணைந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments