Ad Code

Responsive Advertisement

நீங்கள் வாங்கும் நெய் சுத்தமானதுதானா - கண்டுபிடிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள்!

 



சமீபமாக நெய்யில் தாவர எண்ணெய், வணஸ்பதி மற்றும் விலங்கு கொழுப்புகள் கலப்பது பெரும் சர்ச்சையாகி வருகிறது. சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பது இன்றைய காலத்தில் சற்று சவாலாக இருந்தாலும், சில எளிய வழிகளைப் பயன்படுத்தி நாம் அதை கண்டறியலாம்.


சுத்தமான நெய்யை கண்டறியும் வழிகள்:


சுத்தமான நெய் பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறிது மஞ்சள் நிறம் இருக்கலாம். இதற்கு இயற்கையான பால் கொழுப்பின் வாசனை இருக்கும். கருப்பு நிறம் அல்லது செயற்கை வாசனை இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.


நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்து சூரிய ஒளியில் பிடித்துப் பாருங்கள். அது முழுவதும் தெளிவாக இருக்க வேண்டும். மேலே மிதக்கும் துகள்கள் அல்லது தண்ணீர் துளிகள் இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.


சுத்தமான நெய் உருகுவதற்கு அதிக நேரம் எடுக்கும். ஒரு சிறு துண்டு நெய்யை எடுத்து கையில் உருக்கிப் பாருங்கள். மிக விரைவாக உருகினால் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.


ஒரு திரியை நெய்யில் நனைத்து தீபம் ஏற்றிப் பாருங்கள். சுத்தமான நெய் நீண்ட நேரம் எரியும். கலப்படம் செய்யப்பட்ட நெய் விரைவில் கருகிவிடும்.


ஒரு சிறு துண்டு நெய்யை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு பாருங்கள். சுத்தமான நெய் உடனடியாக தண்ணீரில் கரைந்துவிடாமல் கொஞ்ச நேரம்  மேலே மிதக்கும்.


இந்த சோதனைகள் ஓரளவு நெய்யின் சுத்தத்தை பரிசோதிக்க பயன்படும். நம்பகமான விற்பனையாளரிடம் இருந்து நெய் வாங்குவது நல்லது. 



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement