*உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது ?*
மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர் ? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்...
உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை...
படி1 :
https://egramswaraj.gov.in/financialProgressReport.do
என்கிற இணைப்பை சொடுக்கவும்.
படி 2 : பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.
படி 3 : Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.
படி 4 : Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.
படி 5 : கணக்கு தேவைப்படும் வருடத்தினை தேர்வு செய்யவும் .
படி 6: உங்களது மாநிலத்தினை தேர்வு செய்யவும்.
படி 7 : Village Panchayat என்பதனை தேர்வு செய்யவும்.
படி 8 : உங்களது மாவட்டத்தினை தேர்வு செய்யவும்.
படி 9 : உங்களது வட்டாரத்தினை தேர்வு செய்யவும்.
படி 10 : உங்களது கிராமத்தினை தேர்வு செய்யவும்
படி 11 : கணக்கு தேவைப்படும் மாதத்தினை தேர்வு செய்யவும்
படி 12 : உள்ளீட்டு குறியினை சரியாக பதிவிடவும்.
படி 13: Get Report என்பதனை சொடுக்கவும்.
அவ்வளவுதான்....
உங்கள் ஊர் வரவுசெலவு கணக்கு இப்போது உங்கள் கையில்.
0 Comments