Ad Code

Responsive Advertisement

வகுப்பறைகளை சுத்தம் செய்ய மறுத்த மாணவி கன்னத்தில் அறைந்து விட்டதாக ஆசிரியை மீது குற்றச்சாட்டு

 




வகுப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகள் வற்புறுத்தப்படுவதாக தனியார் பள்ளி மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். 


மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்ந்த மாணவி ஒருவரை அவ்வகுப்பு ஆசிரியை வகுப்பறையை கூட்ட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவி மறுக்கவே கன்னத்தில் அடித்துவிட்டதாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று சம்மந்தப்பட்ட ஆசிரியையிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில் அந்த மாணவியை யாரும் தாக்கவில்லை என்றனர். பொதுவாக வகுப்பறைகளை ஒவ்வொரு நாளும் ஒரு மாணவி சுத்தம் செய்வது வழக்கம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement