நடிகை கங்கனாவுக்கு சண்டிகரில் விமான நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பஞ்சாப் போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் விவரிக்கப்பட்டுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் ஹிமாச்சலின் மண்டி தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.
'சஸ்பெண்ட்'
தேர்தல் வெற்றிக்குப் பின் கட்சி கூட்டத்தில் பங்கேற்க கடந்த 6ம் தேதி டில்லி புறப்பட்டார்.
இதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த போது, அவரை மத்திய தொழிற்படையைச் சேர்ந்த பெண் போலீஸ் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்தார்.
இதையடுத்து அந்த பெண் போலீஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதுடன், நேற்று முன்தினம் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது கங்கனா சி.ஐ.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார், இரண்டு பெண் போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது இந்த தாக்குதல் நடந்தது. இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பஞ்சாப் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துஉள்ளனர்.
எப்.ஐ.ஆரில்., கூறியுள்ளதாவது:
நடிகையும், புதிதாக எம்.பி.,யாக வெற்றி பெற்றவருமான கங்கனா, ஜூன் 6ல் சண்டிகரில் இருந்து டில்லிக்கு விமானத்தில் பயணிக்க இருந்தார்.
மாலை 3:26 மணிக்கு பாதுகாப்பு சோதனைகளை முடித்த அவர், சி.ஐ.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசாருடன் தான் செல்ல வேண்டிய விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் வாயிலுக்கு நடந்தார்.
பரிசோதனை
அந்த சமயத்தில் பக்கத்தில் பெண்களை பரிசோதிக்கும் பூத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர், கங்கனாவை நோக்கி வந்து, பட்டென அவர் கன்னத்தில் அறைந்தார்.
கங்கனாவின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸ், குல்விந்தரை பிடித்து தள்ளிவிட்டார். அதன்பின் கங்கனா விமானத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
தவறாக நடந்து கொண்ட குல்விந்தர் மீது வழக்கு பதிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments