Ad Code

Responsive Advertisement

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் - சட்டசபையில் ருசிகரம்

 



சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலுவிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதி பிரச்னை தொடர்பாக கோரிக்கை வைத்தார்.


சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்விக்கு, பதில் அளிக்க எழுந்த அமைச்சர் அன்பில் மகேஷ், கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பாக, அமைச்சர் வேலுவிடம், தன் தொகுதி சார்பில் கோரிக்கை வைத்தார்.


மகேஷ் கூறியதாவது:


திருச்சி மாவட்டம், துவாக்குடியில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில் கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதை கண்டித்து, மாற்று கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். 


அவர்களும் என் தொகுதி மக்கள் தான்.எனவே, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேசி, பிரச்னைக்கு அமைச்சர் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement