நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரித்த 30 பேரை கும்பகோணத்தில் போலீஸார் கைது செய்தனர்.
விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் இன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கூடி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் வெளியான 'அமரன்' பட டீசரில் காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும், பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கண்டித்து, அந்தத் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கமலஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவப் படங்கள் எரித்து அவர்கள் கண்டன முழக்கமிட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
0 Comments