Ad Code

Responsive Advertisement

Whatsapp - ல் வந்தாச்சு அசத்தலான அப்டேட்

 



Whatsapp New Update 2024 Screen Share உலக அளவில் அதிக யூசர்களை கொண்டுள்ள whatsapp செயலானது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.அது என்னவென்றால் வீடியோ கால்களின் போது ஒரு யூசர் தன்னுடைய மொபைல் ஸ்க்ரீனை மற்றொரு யூசருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.


தற்போது இந்த புதிய அம்சமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்கு தளங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த ஸ்கிரீன் ஷேர் வசதியை நீங்கள் ஆன் செய்து விட்டால் உங்கள் போனில் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அவை அனைத்துமே வீடியோ காலில் இருக்கும் மற்றொரு யூசருக்கு அவர்களது திரையில் பார்க்க முடியும். உங்கள் வாட்ஸ் அப்பிற்கு வரும் நோட்டிபிகேஷன்கள் மற்றும் மற்ற அனைத்து விஷயங்களையும் மற்றவரால் வீடியோ கால் மூலமாக இந்த ஸ்கிரீன்ஷேர் வசதியை கொண்டு பார்க்க முடியும்.


ஒருவேளை உங்களுக்கு இது பிடிக்கவில்லை எனில் நீங்கள் “டு நாட் டிஸ்டர்ப்” மோடை ஆன் செய்து வைத்துக் கொள்ளலாம். வாட்ஸ் அப்பின் செயல்பாடுகளை மிகவும் நெருங்கி கவனித்து வரும் wabetainfo என்ற இணையதளத்தில் தான் இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி ஸ்கிரீன்ஷேர் வசதியானது வாட்ஸ்அப் யூஸர்கள் வீடியோ கால் பேசும்போது ஸ்கிரீனின் கீழ்ப்பக்கத்தில் தோன்றும்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement