ஆதார் கார்டு உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் என்னவென்றால் உங்களது ஆதார் தகவல்களை திருட வாய்ப்புள்ளதால் கட்டாயமாக அனைவரும் உங்கள் ஆதார் தரவுகளை லாக் செய்திருக்க வேண்டும். அதைப் பற்றின விரிவான தகவலை கீழ்கண்டவற்றுள் காணலாம்.
உங்களது ஆதார் தகவல்கள் அனைத்தும் திருடப்பட வாய்ப்புள்ளதால் கட்டாயமாக அனைவரும் ஆதார் தரவுகளை லாக் செய்திருக்க வேண்டும்.
ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு
இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் பிறந்த தேதிக்கான ஆவணமாக ஆதார் கார்டினை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆதார் கார்டு மூலமாக ஒரு குடிமகனின் அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். இதனை பயன்படுத்தி ஹேக்கர்கள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர்.
எனவே ஆதார் கார்டினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பயோமெட்ரிக் லாக்கிங் என்னும் முறைப்படி பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பூட்டும் வசதியை பொதுமக்களுக்கு வழங்குகிறது.
இதன் மூலமாக கைரேகை, கருவிழி அல்லது முகப்பதிவு சேர்க்கும் பொழுது உங்களது ஆதார் கார்டினை ஹேக் செய்ய முடியாது. ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று Aadhaar Lock / Unlock என்பதை கிளிக் செய்து ஆதார் எண்ணை பதிவு செய்யவும். இதன் பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.
அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்தவுடன் உங்களது பயோமெட்ரிக் தரவுகள் லாக் செய்யப்பட்டு விடும். மேலும், ஆதார் சேவை மையத்திற்கும் நேரடியாக சென்று உங்களது தரவுகளை லாக் செய்து கொள்ளலாம்.
0 Comments