Ad Code

Responsive Advertisement

காலையில் வெறும் வயிற்றில் "சீரக தண்ணீர்" குடித்தால் ஏற்படும் நன்மைகள்

 



நம்முடைய அகத்தை சீராக வைத்துக் கொள்வதால் தான் அதற்கு பெயர் சீரகம். இதை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால் மலச்சிக்கல் முதலாக ஜீரணக் கோளாறுகள் மற்றும் கொலஸ்டிரால் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் தீரும்.


சீரகத்தில் அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை நம்முடைய உடலில் ப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.அதோடு சீரகத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் காப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்திருக்கின்றன.


சீரக டீ உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் ஒரு பானமாகும். .அதை தினமும் குடித்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடைகுறைய ஆரம்பிக்கும்.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் தேவையற்ற கலோரிகளைக் குறைக்க விரும்பினால் காலை வெறும் வயிற்றில் சீரக டீ குடிக்க வேண்டும். அதேபோல மதியம் மற்றும் இரவு உணவுக்கு முன்பாகவும் ஒரு ஒரு கப் சீரகத் டீ குடித்து வந்தால் எடையை வேகமாகக் குறைக்கலாம்.


சீரகத்தில் உள்ள என்சைம்கள் உடலில் உள்ள சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளை உடைக்கின்றன. இதனா்ல வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களும் அழிக்கப்பட்டு வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.இதனால் நம்முடைய ஜீரண ஆற்றலும் மேம்படும். ஜீரணம் சரியாக இருக்கும்போது கல்லீரல் தொடர்பான மஞ்சள் காமாலை, டைஸ்பெப்சியா, அஜீரணக் கோளாறு மற்றும்ட டயேரியா ஆகியவை வராமல் தடுக்க முடியும்.


சீரகத்தில் உள்ள ஆல்டிகைடு மூலக்கூறுகள். தைமால் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மையைக் கொண்டவை.அதனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சீரக டீயை குடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் முழுக்க வெளியேறும்.


உடலுக்கு நல்லது என்று அளவுக்கு அதிகமாக குடிக்கக் கூடாது. மிதமான அளவில் தான் குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் ஒரு கப் அளவுக்கு குடிக்கலாம். அளவுக்கு அதிகமாக .ந்த சீரக டீயை குடிக்கும்போது கீழ்வரும் சில பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம்.


  • லேசான நெஞ்செரிச்சல்,
  • ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைவது,
  • மாதவிடாய் காலங்களில் அதிகமாக உதிரப் போக்கு ஏற்படுவது


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement