இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட பழம்.இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.
இந்த பழத்தில் வேஸ்ட் எதுவும் கிடையாது. அப்படியே சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய இந்த நட்சத்திர பழத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மூலநோய்
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூலநோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.
தாய்மார்களுக்கு நல்லது
பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.
சரும பாதுகாப்பு
இப்பழத்தினை உண்ணும்போது சருமானது நீர்சத்துடன் சுருக்கங்கள், பருக்கள் இன்றி பளபளப்பாக இருக்கும். எனவே ஸ்டார் பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டுவந்தால் சருமப் பாதுகாப்பினைப் பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு.
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் சுற்றுப்புறச்சூழலால் ஏற்படும் நச்சுக்கள் மற்றும் உடல் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் தாக்குதல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றன. ஆகவே ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நரம்புகள் பலப்பட
ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.
மலச்கிக்கலைப் குறைக்கும்
ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.
சளி, இருமல் நீங்கும்
ஒரு நாளைக்கான விட்டமின் சி தேவையில் 57 சதவீதத்தை நட்ச்சத்திர பழம் பூர்த்தி செய்கிறது. பொதுவான நோய்களான சளி, இருமல், ஜலதோசம், வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று ஆகியவற்றிலிருந்து விட்டமின் சி பாதுகாக்கிறது.
0 Comments