Ad Code

Responsive Advertisement

இந்த தண்ணீரை தினமும் ஒரு டம்பளர் குடிச்சு பாருங்க

 

இந்த நீரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தண்ணீரை தினமும் ஒரு டம்பளர் குடிச்சு பாருங்க, உடலில் நிகழும் மாற்றத்தை இரண்டே நாட்களில் உணர முடியும்.


இதை நாம் வீட்டிலேயே மிக எளிய முறையில் தயார் செய்து அருந்தலாம். அந்த நீர் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையானவை

பூண்டு – 5 பல்

இஞ்சி – 1 துண்டு

எலுமிச்சை – 1/2

தேன் – தேவையான அளவு

தண்ணீர்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் 5 பல் பூண்டை போட்டு கொதிக்க விட வேண்டும். இதனுடன் இஞ்சியையும் தட்டி போடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்த பின் அடுப்பிலிருந்து இறக்கி, அந்த நீரை ஆற வையுங்கள். தண்ணீர் நன்றாக ஆறிய பின் தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து குடியுங்கள். இரண்டு நாட்களிலேயே மாற்றங்கள் நிகழ்வதை உணரலாம்.


நன்மைகள்

1. இந்த தண்ணீரை தினமும் ஒரு டம்ப்ளர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் உடலில் நோயே வராமல் போகும்.


2. இந்த பூண்டு, இஞ்சி, எலுமிச்சை கலந்த தண்ணீரைக் தினமும் குடிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து போகும். இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீராகும். கொழுப்பு கரைந்து போவதால் உடல் நல்ல வலுமையடையும்.



3. இந்த இஞ்சி, பூண்டு, எலுமிச்சை கலந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற்றப்பட்டு அடிக்கடி சளி, இருமல் போன்றவை வருவது தடுக்கப்படும்.


4. இதயத் தமனிகளில் அடைப்பு இருந்தால், அதனை சரிசெய்ய இந்த தண்ணீரை தொடர்ந்து ஒரு டம்ப்ளர் குடித்தாலே போதும். இரத்த நாளங்களில் இருக்கும் வேறு சில பிரச்சனைகளும் நீங்கும்.


5. முக்கியமாக இந்நீர் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். ஆகவே இந்த நீரை தினமும் ஒரு டம்ப்ளர் குடித்தால் உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.


6. இந்நீர் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும் மற்றும் சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் குணமும் இந்த நீருக்கு உண்டு.


7. இந்த இஞ்சி, பூண்டு, எலுமிச்சை கலந்த தண்ணீரை குடிக்கும் போது அஜீரணம், வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும். சரும பளபளப்பு ஏற்படும்.


இதர நன்மைகள்

பூண்டு:

பூண்டில் மருத்துவ குணங்கள் மிக அதிகம் உள்ளது. பூண்டு நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு முக்கியப்பங்கு வகிக்கிறது.


இஞ்சி:

இஞ்சி பொதுவாக கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. இஞ்சி சாறு உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். எனவே அன்றாடம் இஞ்சி சாற்றினை பருகி வர உடல் எடை குறையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


எலுமிச்சை:

எலுமிச்சை சாற்றிற்கு பல அதிசய மருத்துவக் குணங்கள் உண்டு. எலுமிச்சை சாறு நமது இரத்தத்தை சுத்திகரிக்கும். மட்டுமல்லாது எலுமிச்சை ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால் சரும பளபளப்பை தரும்.


எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதினால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.


எலுமிச்சை சாறு கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது. இதனால் கல்லீரல் சுத்தம் அடைவது மட்டுமல்லாமல் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் தீர்வு கிடைக்கும்.


ஆகவே இஞ்சி, பூண்டு,தேன் மற்றும் எலுமிச்சை கலந்த இந்த பானத்தை தினமும் ஒரு டம்ப்ளர் குடித்து வாருங்கள். மட்டுமல்லாது தினமும் உணவிலும் இந்த இஞ்சி, பூண்டை சேர்த்துக் கொண்டு பயனடையுங்கள்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement