உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பினைக் குறைக்க நீங்கள் சரியான உணவுப் பழக்க வழக்கத்தை மேற்கொண்டால் போதும் கெட்ட கொழுப்பைக் கரைத்து தொப்பையைக் குறைத்து விடலாம்.
1) தண்ணீர்:
ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல்
எடை குறைப்பிற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே தண்ணீர் அருந்துவதை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டாம். அதிலும் குறிப்பாகச் செம்புபாத்திரத்தில் வைத்திருந்து குடிக்கும் தண்ணீரில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் தண்ணீரிலே கிடைத்துவிடும். மேலும் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
2) பூண்டு:
பூண்டு நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும். எனினும் வெறும் வயிற்றில் பாலில் வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
20 தோல் அகற்ற பட்ட பூண்டுடன் கையால் எடுக்கப்பட்ட தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 20 முதல் 40 நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை தேனில் நன்றாக ஊறியிருக்கும் அவற்றில் இரண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர மிக விரைவில் உங்கள் இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்குவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தொப்பையையும் குறைக்க உதவுகிறது.
பூண்டை பச்சையாக உண்ண வேண்டாம். பச்சையாக உண்டால் அதன் காரம் உங்கள் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும்.
0 Comments