Ad Code

Responsive Advertisement

இது தெரிஞ்சா இனி ஆரஞ்சு, எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டிங்க..!

 



உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய தானியங்களுடன் பழங்களையும் சாப்பிடுவது அவசியம். இருப்பினும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சுவையான சிட்ரஸ் பழங்களை நாம் உட்கொள்ளும்போது, ​​அவற்றின் தோல்களை குப்பை தொட்டியில் கொட்டுகிறோம்.


தேயிலை அல்லது ஊறுகாய் தயாரிப்பதன் மூலம் பழங்களின் தோல்களை உட்கொள்ளலாம் என்பது மட்டுமல்லாமல், அவை உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. சிட்ரஸ் பழ தோல்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்த சில எளிய டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.,


 உங்கள் காபி மேக்கர் பிடிவாதமான கறைகளால் அசிங்கமாக காணப்பட்டால், அவற்றை அகற்ற முடியாமல் போராடுகிறீர்களா? நீங்கள் எலுமிச்சை பழத்தின் தோல்களை பயன்படுத்தி எளிதாக சுத்தம் செய்யலாம்.ஒரு தட்டில் ½ தேக்கரண்டி பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை தோல்களை எடுத்து பேக்கிங் சோடாவில் நனைத்து உங்கள் காபி மேக்கரை அதனை கொண்டு துடைக்கவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு தண்ணீரில் கழுவினால் கறைகள் மறைந்துவிடும்.


உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால், நீங்கள் பருக்கள் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இதற்கு ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து உங்கள் சருமத்தில் அப்ளை செய்தால் உடனடி பலன் கிடைக்கும். ஆரஞ்சு தோல் பவுடரையுடன் தண்ணீர், தேன் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் ஸ்க்ரப் சரும துளைளை இறுக்கி எண்ணெய் பசையை உடனடியாக நீக்கிவிட்டு சருமத்தை ஆரோக்கியமாக்கும்.ஆரஞ்சு தோல்களை 2-3 நாட்கள் வெயிலில் நன்கு காய வைக்கவும். ½ கப் மசூர் பருப்பை இரவில் ஊற வைக்கவும். காய்ந்த ஆரஞ்சு பவுடர், பருப்பு இவை இரண்டையும் மிக்சியில் நன்கு அரைக்கவும். பால் சேர்த்து அரைக்கலாம். இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்யவும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் சருமம் பொலிவாகும்.


சமைத்தபின் அடுப்பில் தங்கியிருக்கும் பிடிவாதமான கறைகளை நீக்க அன்னாசி பழ தோல்கள் உதவுகிறது. அன்னாசிப்பழம் தோல் கடினமானது மற்றும் அதில் உள்ள அமிலம் ஒரு நொடியில் அடுப்பில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது.அடுப்பில் தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் அடுப்பை துடைக்க அன்னாசி பழ தோல்களைப் பயன்படுத்தவும். கறைகள் எளிதில் வெளியேறுவதை நீங்கள் கவனிப்பீர்கள். வெவ்வேறு பகுதிகளை சுத்தம் செய்ய தனி துண்டுகளைப் பயன்படுத்துங்கள். கடைசியாக துணியைப் பயன்படுத்தி துடைக்கவும்.


கோடைகாலத்தில், வியர்வை காரணமாக துணிகளில் துர்நாற்றம் வீசுகின்றன. சில நேரங்களில் அவற்றை சிறந்த டிடர்ஜெண்டுகள் சுத்தம் செய்வது கூட சுலபமானதாக தெரியவில்லை. சிட்ரிக் பழங்கள் போன்ற இயற்கை வளங்கள் உங்கள் துணிகளில் உள்ள துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.ஒரு பெரிய கிண்ணத்தில், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களை எடுத்து சேகரிக்கவும். 


நீங்கள் உங்கள் துணிகளை அலசும் தண்ணீரில் முன்னதாகவே இந்த தோல்களை போட்டு வைத்து கொள்ளவும். துணிகளை நன்கு துவைத்த பின்னர் அலசும் போது அந்த தண்ணீரில் சிட்ரஸ் பழங்களின் நன்மைகள் கலந்திருப்பதால் உங்கள் உடைகள் துர்நாற்றத்தில் இருந்து எளிதில் விடுபடும்.


உங்களுக்கு பளபளப்பான முகம் வேண்டுமா? கண்டிப்பா இந்த ஆரஞ்சு தோல் பொடியை டிரை பண்ணுங்க!


ஆரஞ்சு பழத்தோல்களை நிழலில் காய வைக்கவும். அவை நன்றாக உலர்ந்ததும், தோல் நன்றாக தூளாக மாறும் வரை மிக்சியில் அரைக்கவும். இந்த ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம் அல்லது ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.


* எலுமிச்சை பழத்தோலை துருவிக்கொள்ளவும் பின்னர் அதை காய்கறிகள், பானங்கள் அல்லது சாலட்டில் கலந்து சாப்பிடுங்கள்.

* எலுமிச்சை பழத்தோலை அரைத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து அதன் மூலம் பல ரேசிபிகளை நீங்கள் தயார் செய்யலாம்.


* எலுமிச்சம் பழத்தோலைத் தேய்த்த பிறகு, மிக்ஸியில் நன்கு அரைத்து அதை பிரெட் ஸ்ப்ரெடாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

* நீங்கள் சமையலறையை சுத்தம் செய்ய விரும்பினால், எலுமிச்சை பழத்தோல்களில் பாதியில் பேக்கிங் சோடாவைத் தடவி கேஸ் மற்றும் ஸ்லாப்பை சுத்தம் செய்துக் கொள்ளலாம்.


* பேக்கிங் சோடாவைத் தவிர, அதன் தோலுடன் கலந்த வினிகரையும் பயன்படுத்தலாம்.

* மழைக்காலத்தில் பூச்சிகள் உடலில் அதிகம் ஒட்டிக்கொண்டால், எலுமிச்சைத் தோலை உடலில் தேய்க்கவும்.

* சமையலறையின் மூலையில் துர்நாற்றம் வீசினால், எலுமிச்சைத் தோலை அங்கே வைத்தால், துர்நாற்றம் மறைந்துவிடும்.


* எலுமிச்சம்பழத் தோலைத் தேனில் போட்டு, முகத்தை சுத்தம் செய்யலாம்.

* ஃபேஸ்மாஸ்க் தயார் செய்ய நீங்கள் எலுமிச்சை பழத்தோலை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement