இந்தியா என்ற பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விளம்பரத்துக்காக பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. காங்., திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 26 கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டணி என பெயர் வைக்கப்பட்டது.
இந்திய தேசிய வளர்ச்சிக்கான கூட்டணி என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியா என அழைக்கப்படுகிறது. இந்தியா என்ற பெயரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 Comments
Yes, இனிமேல் நாய்க்கு கூட இப்படி பேர் வச்சு அசிங்கப்படுத்துவாங்கலோ????
ReplyDelete