Ad Code

Responsive Advertisement

"ஜெயிலர்" திரைபடம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்!

 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதனால் தனது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்ய ரஜினி நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டார். கடைசியாக நெல்சன் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.  


பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியானது.  சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஆர். நிர்மல் ஆகியோர் கையாண்டுள்ளனர்.


காவல்துறையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரஜினி தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனர் ஆக பணிபுரிகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகனை அந்த கும்பல் கொலை செய்து விடுகிறது, தன் மகனை தான் நேர்மையாக வளர்த்ததால்தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி ரஜினி அந்த கும்பலை பலி வாங்குகிறார், இறுதியில் என்ன ஆனது என்பதே ஜெயிலர் படத்தின் கதை.


ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ரஜினி ஒரு சட்டிலான பர்பாமன்ஸை கொடுத்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் சரி யோகி பாபு உடன் செய்யும் காமெடி காட்சிகளிலும் சரி முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படம் முழுக்கவே ரஜினிக்கு பில்டப் மற்றும் மாஸ் காட்சிகள் நிறைந்துள்ளது l, அதில் கணக்கச்சிதமாக உள்ளார் ரஜினி. ரஜினிக்கு அடுத்தபடியாக வில்லனாக நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகன் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர்.


தமன்னா, ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், மோகன்லால் ஆடியோ சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். அவர்கள் வரும் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தனது முந்தைய படமான பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததால் ரசிகர்களால் மோசமான விமர்சனத்திற்கு உள்ளான நெல்சன் இந்த படத்தில் கம்பக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்துள்ளார் என்பது கண்கூடாக தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் என்ன விரும்புவார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு ஜெயிலர் படத்தை எடுத்துள்ளார்.


நெல்சனின் முந்தைய படங்களை போல ஜெயிலர் படத்தில் காமெடி காட்சிகள் அவ்வளவாக ஒர்க் ஆகவில்லை. ஆனாலும் அதனை மறக்கடிக்கும் விதமாக ஆக்சன் காட்சிகள் படம் முழுக்கவே நிறைந்துள்ளது. ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் அடுத்தபடியாக படத்தை தாங்குவது அனிருத்தின் பின்னணி இசை தான். சொல்லப்போனால் அனிருத் இல்லை என்றால் ஜெயிலர் படமே ஒரு படி கீழே தான் இருந்திருக்கும், அந்த அளவிற்கு கடுமையான உழைப்பை கொட்டியுள்ளார்.  


மற்ற படங்களை விட ரஜினி இந்த படத்தில் ஒரு படி பின்னால் இருந்துதான் நடித்துள்ளார், காரணம் அவரை சுற்றியுள்ள கதாபாத்திரங்களை அவருக்கு உதவி செய்கிறது. கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் ஜெய்லர் படத்தில் ஆங்காகே கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. படத்தில் வரும் முக்கியமான விஷயம் நன்றாகவே இருந்தது, மொத்தத்தில் ஜெயிலர் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement