ஈரோடு அடுத்த லக்காபுரம் கரட்டங்காடை சேர்ந்தவர் சங்கர் (53). இவரது மனைவி சுகந்தி. ஒரு மகள், மகன் உள்ளனர். கொங்கனாபுரத்தில் தனியார் பள்ளியில் சங்கர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் திரும்பவில்லை.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள தண்டவாளத்தில் சங்கர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில், கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் சங்கர் அவ்வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது உறுதியானது.
0 Comments