Ad Code

Responsive Advertisement

தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை

 



வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுவார்கள். இதையொட்டி இந்திய அஞ்சல் துறை அனைத்து தபால் நிலையங்கள் முலமாக தேசிய கொடி விற்பனை தொடங்கி உள்ளது. 


பொள்ளாச்சி தபால் நிலையத்தில் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தேசிய கொடி விற்பனை தொடங்கிவைத்தார்.


மேலும் அவர் கூறுகையில், பொள்ளாச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து கிளை, துணை, தலைமை தபால் நிலையங்களில் நேரடியாக ரூ.25 செலுத்தி தேசிய கொடியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.epostoffice.gov.in என்ற இணையதள வழி மூலமாகவும் தேசிய கொடியை பெற்று பயன்பெறலாம். 


மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும், விரைவு தபால் சேவையும், பொள்ளாச்சி, உடுமலை தலைமை தபால் நிலையங்களில் வெளிநாடுகளுக்கு தபால் அனுப்பும் பார்சல் சேவையும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளை பெற்று பயன் அடையலாம் என்றார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement