Ad Code

Responsive Advertisement

நம்பிக்கையில்லா தீர்மானம் - மக்களவையில் அமளி

 



மக்களவையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் பேசி முடித்த நிலையில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேச அழைக்கப்பட்ட நிலையில், அவையில் அமளி ஏற்பட்டது.


பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேசும்போது மக்களவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து அமளி நிலவியதால், அவை உறுப்பினர்களை அமைதிப்படுத்த அவைத் தலைவர் முயற்சித்து வருகிறார். மணிப்பூர் விவகாரம் இருட்டடிப்பு செய்யப்படுவதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.


எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, மக்களவையில் நடைபெற்று வரும் விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் காங்கிரஸ் சார்பில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.


அடுத்து பேசுவதற்கு ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அழைக்கப்பட்டார். அவர் பேசும் போது கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். சற்று நேரம் அமளி குறைந்ததும், மீண்டும் அவர் பேசத் தொடங்கியதுபோது, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமெழுப்பினர்.


முன்னதாக, மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில், பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? என்பது உள்ளிட்ட 3 கேள்விகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.


முதலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், விவாதத்தைத் தொடங்கி வைத்து காங்கிரஸ் சார்பில் பேசினார்.


அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? மணிப்பூர் சென்று பார்த்ததால்தான், அங்கிருக்கும் களநிலவரம் எங்களுக்குத் தெரியும். முதலில் மணிப்பூர் செல்லுங்கள். அங்குள்ள களநிலவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு பேசுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மணிப்பூரில் வன்முறை தொடரும் நிலையில், இதுவரை அந்த மாநில முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படாதது ஏன்? மணிப்பூர் முதல்வர் பதவியை காப்பாற்ற மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு முயற்சிக்கிறது? 


மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை. பிரதமரின் மௌன விரதத்தைக் கலைக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் 80 நாள்களுக்குப் பிறகே பேசினார். அதுவும் வெறும் 30 வினாடிகள்தான் என்றும் அவர் கூறினார்.


இன்றும் நாளையும், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி மக்களவையில், பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கவிருக்கிறார். இந்த நிலையில், இன்று நாள் முழுவதும், மக்களவையில், தீர்மானம் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement