காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.பதவியை திரும்பப்பெற்றார். ராகுல் காந்தி வயநாடு எம்.பி.யாக தொடர்வார் என்று மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்று தெரியவந்துள்ளது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அவதூறுவழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் நீதிமன்றம் விதித்திருந்தது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் எம்.பி. என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை காலி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், குஜராத் ஐகோர்ட்டில் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தான் குற்றம் இழைக்காததால் மன்னிப்புகேட்க முடியாது என ராகுல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். நீதிபதிகள் கவாய், நரசிம்மா, சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ராகுல் வழக்கை விசாரித்தனர்.
ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார், இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவி பெற்றுள்ளார், ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை கைதுசெய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றாவளி என்ற தீர்ப்பை கடந்தவாரம் உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து. உச்சநீதிமன்ற உத்தரவு அடுத்து எம்.பி. பதவியை ராகுல் காந்தி திரும்பப் பெற்றார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்கத்தை ரத்துசெய்து அறிவிப்பு வெளியானது. ராகுல் காந்தி வயநாடு எம்.பி.யாக தொடர்வார் என்று மக்களவை செயலகம் அறிவித்தது. இந்நிலையில், மக்களவை கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர்.
முன்னேறுகிறார் ராகுல் காந்தி என்று முழக்கமிட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை வணங்கிவிட்டு நாடாளுமன்றத்துக்குள் ராகுல்காந்தி நுழைந்தார். தனது டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் உள்ள சுய விவரக் குறிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என ராகுல் காந்தி மீண்டும் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
0 Comments